சிற்பி

சிற்பி
இவன் செதுக்குவது கல்வெட்டை அல்ல...! கல் மனதை...!

Thursday, 30 December 2010

பேனா ....



பேனா ....

விரல்களின் காதலன்..
மொழிகளின் காவலன்../

மொழியின் தேடல்கள்..
பேனாவின் உடல்கள்../

பேனாவே..
உன்னை கண்டதன் முகவரி..
மொழி கொண்டது முதல்வரி../


தலைமுறை பல கண்ட 
தலைமகன் - நீ 
தரம் தாழ்ந்திடா 
விலைமகன் :

உனக்கு தான் 
எத்தனை காதலிகள் :
எல்லையும், கணக்கும் 
அற்ற மொழிகள் :

நாகரீகமோ வளர்ச்சி 
பரிமாணம் - உன்னுருவம் 
நாளொருமேனியும் 
கவர்ச்சி உருமாறும்../

மரணம், ஜனனம்
எனுமிரண்டு ...
மாறி மாறி உனக்கு 
வருவதுண்டு ../

உடற்தோலை கழற்றி 
எறிவது பாம்பின் சிறப்பு :
உயிர் நீரை ஊற்றி 
பெறுவது உன் பண்பின் சிறப்பு :

கரங்களுக்குள் அடங்கும் 
ஆயுதம் - நீ
கர்ஜித்தால் ஆட்சியில் 
ஏறும் காகிதம் :

உன் எழுத்துகள் 
ஒருபுறம் நீரோட்டம் ;
புறக்கணித்தால்
உருவாகும் போராட்டம் :

இரத்த தானம் செய்வின்
உயிர் பெறும் உடலெங்கும் - நீ 
இங்க் தானம் செய்வதாலோ 
உயிர் பெறுது உலகெங்கும்../

உன்னை கவனிக்க 
மறந்தவன் அறிவு குருடன் :
கவனித்து மறைத்தவன் 
அசூர திருடன்: 

Monday, 6 December 2010

வாழ்வினில் வெளிப்படுத்துவோம் படிப்பினை




வாழ்வினில் வெளிப்படுத்துவோம்  படிப்பினை 



அறிவும் மனமும்
இணைத்திருக்கும் கயிறு ...
அறுந்து விடுகையில் 
ஆரம்பமாகிறது தவறு .../

பொய்களை கொண்டு - நம் 
வார்த்தைகளை உடுத்தி கொள்ளும் :
நோய்களை கொண்டு - நம் 
வாழ்க்கையை உறுத்தி கொல்லும்:

அவசரங்கள் ஏற்றும் போதையில் 
தவறுகள் நிறைந்தாடும் ...
அதிக தவறுகள் அடிக்கடி நிகழ்வது 
கவன குறைவாகும் ..../

கோபம் வெளிப்படுத்தும் உணர்ச்சியில் 
தவறுகள் சிதறி விழும் :- மனதில் 
காயம் ஏற்படுத்தும் மகிழ்ச்சியில் 
தவறுகள் சிரித்து எழும் :

சந்தர்ப்பங்கள் தவறுகளை 
செய்ய சொல்லும் :
நிர்ப்பந்தங்கள் தவறுக்குள் 
நிற்க செய்யும் :

தவறுகளில் தடுக்கி விழும் மனம்: - வாழ்வை 
தடுமாற்றத்துடனே நடத்த இயலும் தினம் :
மலரை விட மென்மையானது மனம் :- அதை 
மலையை போல் கடினமாக்குவது தவறின் குணம் :

நிலையில்லாதது வாழ்வு - இவ் 
வுலகம் நமக்கு சொல்வது : -இதில் 
நிலைப்பதற்கா தவறினை 
நாம் செய்வது ?

தவறுகள் சொல்லி தரும் வகுப்பினை - கேட்டு 
வாழ்வினில் வெளிப்படுத்துவோம்  படிப்பினை ...