விஞ்ஞான அதிசயம் - உனை
விவரிக்க வேண்டியது அவசியம்.
காலங்கள் செரித்து போடப்பட்ட கடிதங்கள் - இன்று
காலங்கள் சேமித்து மீட்டப்பட்ட நிமிடங்கள் :
விஞ்ஞானத்தின் கருவறையிலிருந்த உனக்கு
விலாசம் தந்தவன் யாரோ ?
விபரமறியாதவர் அறியட்டும்
மார்ட்டின் ஹூப்பர் தான் அந்த ஹீரோ "
உயிரற்ற உன்னால் உணர்வுட்டு
உயிர்பெற்றோர் உண்டு /
கைரேகை சாலையில்
பயணிக்கும் கைபேசி - உனை
கைப்பிடித்தவன்
பெறுவானோ? கைராசி ../
நீ ..
இன்ப செய்தி தருகையில்
உள்ளமோ மகிழ்கிறது ..
இழப்பு செய்தி தருகையில் - கண்ணில்
வெள்ளமாய் திகழ்கிறது ../
ஒலியால் உயிரை இழுக்கும் - இருவர்
ஓசையே உறவை இணைக்கும் ../
இரு இதழ்கள் கொடுத்துகொள்ளும் இனிப்பை..
இருதயங்கள் பெறுகிறது அந்த இணைப்பை.../
தொலைவுகள் தொடும் இடமாகும் - உன்னால்
தொல்லைகள் கூட வரமாகும் .
கண்ணீர் பேசும் வார்த்தை - உன்னால்
கவிதை பேசும் :
முன்னாளில் கேட்போர்
"எங்கடா போற கைவீசி ?"- அந்த
முன்னோர் இன்றிருந்தா அவர்கள்
கையிலும் இருக்கும் கைபேசி ../
மழலைகள் தொடுகையில்
மணம் வீசும் - அம்
மவுனங்கள் உன்னால்
தமிழ் பேசும் :
துயரங்கள் உண்டென்று - நீ
தூங்குபவரை எழுப்புவதுண்டு :
வெற்றிகள் கிடைத்ததென்று - நீ
வாழ்த்தும் பெறுவதுண்டு :
கன்னி பெண்ணின் கட்டிலிலே
உனக்கென தனி இடமுண்டு ..
காதல் பேசும் காம பேச்சில்
உன் கற்பும் கலைவதுண்டு ../
துள்ளி திரியும் மாணவ கூட்டம்
நீயிருக்கும் சபை நோக்கியே ஓட்டம் :
பாடி வரும் உன்னை - சிலசமயம்
திட்டிவிட தோன்றும் ..
தேடி வரும் உனக்காய் - மனம்
பரிதாபமும் காட்டும் ../
உன் சிணுங்கல் கேட்டு
அமைதியும் ஆர்ப்பரிப்பாகும் :
உடன் இருப்பவர் முகமோ
உடனே எரிச்சலாகும் :
உன் கவர்ச்சி தன்மையால்
காதல் கொண்டோரும் உண்டு :
கதிரியக்க தன்மையால்
காது இழந்தோரும் உண்டு :
ஆசையாய் படம் பிடித்து
வியாபாரத்தை நிரப்புவாய் :
ஆபாசமாய் படம் எடுத்து
விபச்சாரத்தை பரப்புவாய் :
பொருந்தா காதலையும்
பொருத்தம் பார்த்து
சேர்த்து வைப்பாய் :
அண்டை வீட்டு
கணவன்,மனைவி
கள்ள காதலை
ஏற்றி வைப்பாய் :
பாலுணர்வு தூண்டும் படங்களால்
பாலியல் கொடுமை நடத்தி வைப்பாய் :
பாலியல் படங்களை - மாணவ
பாடங்களாக அனுப்பி வைப்பாய் :
விரச வாசகங்கள் உன்னால்
விடலைகளுக்கு வசியமானது -
விச வாசகங்கள் இவர்களுக்கு
போதிக்கப்படும் விஷயமானது :
பணம் படைத்தவன்
மனம் கெடுக்க
படையெடுக்கும் மிரட்டல்கள் - அக்
கயவர் கூட்டம் கண்டறிய பயன்பட்டால்
உனக்கோ கிடைக்கும் கைத்தட்டல்கள் :
கைப்பேசியே - உன்னை
கைப்பிடித்தவன் கவனிக்கவே இது ..