ஒவ்வொரு நாளும் - இங்கு
சுடுங்கோபத்தின்
விளைச்சல்கள் :
ஒழுங்காய் கடமை
செய்தால் கூட
பரிசு பொருளாய் எரிச்சல்கள் :
நச்சரிப்புகளுக்கு இடையே
நலம் விசாரிப்பு நடக்கும் :
எரியும் தீப்பொறிக்குள்ளோ
புன்னகை கருகி கெடக்கும்../
இம்சைகள் கொடுத்து
இன்பத்தை பெறலாம் எனும்
கணிப்புகள் நடக்கிறது :
இருதய நெஞ்சுக்குள்ளோ
அமிலத்தை ஊற்றும்
திணிப்புகள் நடக்கிறது :
எதற்கெடுத்தாலும்
சாப வார்த்தைகள் வீசுவது
சாதிக்க உதவுமோ ?
ஏளன பேச்சுகள் தான்
வாழ்க்கை ஏட்டை
எழுத முடியுமோ ?
வெட்டிப்பேச்சுகள்
நிகழ்த்தும் வெற்று புகழ்
கானல் உலகை
மட்டுமே காட்டுகிறது :
வெட்டித்தனம்
ஒதுக்கி வைத்தாலோ
வெற்றி புகழும்
சற்று மாட்டுகிறது :
ஏளனங்களை
ஏற்றுக்கொண்டால்
எதிர்ப்புகள் கூட -
நம்மை நெருங்காது :
அவமானத்தை
உடுத்திக்கொண்டால்
அகிலம் என்றும்
நமக்கு சுருங்காது :

No comments:
Post a Comment