சிற்பி

சிற்பி
இவன் செதுக்குவது கல்வெட்டை அல்ல...! கல் மனதை...!

Tuesday, 13 January 2015

அவமானங்கள்


ஆசைகளால் 
அழிகிறது நிதானம் - அவசர 
ஆர்வங்களால் 
எரிகிறது நம்மானம் :

தடுப்புகளை 
உடைத்திடும் தன்மானம் :
தடுக்கி விழுகையில் 
ஏற்படுது அவமானம் :

இருட்டுக்குள் 
அடைந்து கிடக்கும் - அவமானம் 
இருதயத்தை 
குடைந்து எடுக்கும் :

உறுப்பெங்கும் 
இரத்தம் துடிக்கும் - உயிர் 
நரம்பெல்லாம் 
யுத்தம் வெடிக்கும் :

பரபரப்புகளால் 
சுற்றி திரிந்த மனம் :
படபடப்புகளால் 
திக்கி திணறும் தினம் :

பார்வைகள் தோல்வியில் 
தரையை நோக்கும் - கீழ் 
பாதங்கள் கேள்வியால் 
தலையை கேட்கும் :

பழிவாங்கவே - மனம் 
புது வண்ணத்தில் 
படமெடுக்கும் - சிலரை 
குழிபறிக்கவே நம் 
எண்ணத்தில் 
படையெடுக்கும் :

சூழ்ச்சிகளால் வீழ்த்த 
துடிக்கும் சூத்திரம் - அவமானம் 
சூழும் போது மனதில் 
ஏற்படும் ஆத்திரம் :

வருமானங்கள் - நம் 
வாழ்க்கையின் கருவி: 
அவமானங்கள் - நம் 
வாழ்வியலின் பகுதி :

வாழ்க்கையை 
உருக்குவது தன்மானம் :
வரலாறை 
உருவாக்குவது அவமானம் :












Monday, 12 January 2015

ராஜ பக்சே தோல்வியும்..! நரேந்திர மோடியும்...!





ராஜ பக்சே நடத்தியது
இனவாதம் -நரேந்திர
மோடி  நடத்துவது 
மதவாதம் :

இனவாதம் 
கேட்டது கேள்வி - பதிலோ 
இலங்கையில் 
ராஜ பக்சே தோல்வி:

தூக்கி பிடித்ததால் 
இனவாதம் - அதனால் 
தூக்கில் ஏறியது 
அவன் மானம் :

கொடுமைகள் நிறைந்தது 
அவன் ஆட்சி - அக் 
கொடுங்கோலன் தோல்வியே
அதற்க்கு சாட்சி :

பொது சேவையில் 
பயணித்திருந்தால் 
கிடைத்திருக்கும் 
பெரும் வெற்றி ; 

பொது பல சேனாவுக்கு 
பயந்திருந்ததால் 
ஊரே சிரிக்குது 
உன்னை பற்றி:

சமத்துவத்தை
பேண வேண்டும்  நிர்வாகம் - இங்கோ 
சர்வாதிகாரத்தை
தூண்டியது கருநாகம் - அதனால் 
சமாதியாய் ஆனது 
அந்தோ பரிதாபம்:


மக்களின் கண்ணீரை அதிகம் 
செலவழிக்கும் அரசாங்கம் : அம் 
மக்களாலே ஒருநாள் அசிங்கம் 
பட்டு சிறை வாங்கும்: அதனாலே 
அவர்கள் வடித்த கண்ணீரின் 
கறை  நீங்கும்: அதன் மூலம் 
ஜனநாயகம் மீண்டும் 
தளைத்தோங்கும்...!

இனவாதத்தை 
கை பிடித்தவனுக்கு 
சரித்திரம் கொடுத்த பாடம்:

மதவாதத்தை 
கையிலெடுப்பவனுக்கு 
உணர வேண்டிய நேரம்:


குறிப்பிட்ட இனத்தை மட்டும் 
மகிழ்வித்தவனுக்கு 
நேர்ந்த சவுக்கடி :
குறித்து கொள் மோடியே - உனக்கும் 
ஏற்படும் இத்தகைய நெருக்கடி;

இலங்கை உணர்ந்தது 

இனவாதம் பற்றி...
இந்தியா உணருமா ?
மதவாதம் பற்றி...!


















Saturday, 10 January 2015

இன்றைய இரவு...! இன்றைக்கு நிலவு...!


கோடையில் அனல் காற்று - இங்கோ 
வாடையில் மணல் காற்று :

புழுதி படர்ந்தாடும் சாலைகள் :
பூக்களே மலராத இப்பாலைகள் :

பசுமையே இல்லாத பூந்தோட்டம் - இங்கே 
பசியோடு குளிரும் நம்மை வாட்டும் :

வாட்டும் குளிரில் வளருது நம் வறுமைகள் - அது 
காட்டும் வழியினில் வதங்குது நம் திறமைகள் :

தூக்கம் தழுவும் நம் கண்கள் -அதில் 
தூசியை நிரப்புதே இம்மண்கள் :

தாக்கும் புயலில் நம் உடம்பு :-அதை 
தாக்கி அழிக்குது நம் உழைப்பு :

அமைதியில்லாமல் கழிந்தது இன்றைய இரவு :
அதோடு சேர்ந்து கரையுது இன்றைக்கு  நிலவு :


Thursday, 8 January 2015

லுசைல் விளையாட்டு அரங்கம் - LUSAIL MULTIPURPOSE HALL


இந்த 
விளையாட்டு 
அரங்கம் - பலர் 
வியர்வையின் 
சுரங்கம் ...!


கழிவுகளிருந்து     
கலைப்பொருளை 
கண்டெடுத்தது - இவ்வரங்கம் 
தகுதியற்றவரிடமும் 
திறமையை வென்றெடுத்தது :
                                    

குன்றிய குளிரில் 
துடித்ததன் வேதனை :
குறுகிய காலத்தில் 
முடித்தது தான் 
இதன் சாதனை :                                                         
                                                                                   
வெயிலில் 
ரத்தம் வடித்த 
முன் நெற்றி -இதை 
வெளியில் 
பார்க்கையில் தெரிந்தது 
நம் வெற்றி..!

உழைப்பாளர்கள் பலர் 
தம் கை தந்து : 
ஜன 15 ல்  நடக்குது 
உலக கோப்பை  கைப்பந்து :-