தர்மபுரி கலவரம்
ஆதி மனிதன் தன்
சகோதரனை அழிக்க
உருவாக்கினான் "சதி"- அதன்
பரிணாம வளர்ச்சியே நமக்கு
பரிமாறப்படும் இந்த "சாதி"
"எல்லோரும் ஒரு தாய் மக்கள்"எனும்
பாலப்பாடம் பயின்ற "நீயா"?
சகோதர இரக்கத்தை
எரிக்கும் "தீயா"க...!
"கலப்பு திருமணம்" என்பதன் பொருள்:
"கரைப்பு - இரு இனம்" அல்லவா ?
காதல் என்றால் உயர்சாதி
பார்க்கும் "மானிடா"?-உங்கள்
காமத்திற்கு மட்டும்
கீழ்சாதி "தீனியா"
எந்த சாமி இட்டது கட்டளை-நீயே
இச்சாதியை காக்கும் தலைவனென்று ....
ஆதி மனித சாதியே அழிந்த பின்பு -இடையில்
வந்தேறிய எந்த சாதியும் ஒருநாள் அழிவதுண்டு ...!
சாதி வெறி பிடித்தாடும் தமிழர்காள் - உம்
சாதி பெயர் தோற்றுவித்தவர் யாரோ ?-அதை
பயிற்றுவித்தவர் தான் யாரோ ?
எத்தனை பாரதியும்,பெரியாரும்
வந்து என்ன பயனோ ?
திருந்தா உங்கள் புத்தியை தான்
என்ன செய்வது ?என்று
தமிழுக்கும் தெரியவில்லை!
தமிழருக்கும் புரியவில்லை!

No comments:
Post a Comment