
வாழ்வினில் வெளிப்படுத்துவோம் படிப்பினை
அறிவும் மனமும்
இணைத்திருக்கும் கயிறு ...
அறுந்து விடுகையில்
ஆரம்பமாகிறது தவறு .../
பொய்களை கொண்டு - நம்
வார்த்தைகளை உடுத்தி கொள்ளும் :
நோய்களை கொண்டு - நம்
வாழ்க்கையை உறுத்தி கொல்லும்:
அவசரங்கள் ஏற்றும் போதையில்
தவறுகள் நிறைந்தாடும் ...
அதிக தவறுகள் அடிக்கடி நிகழ்வது
கவன குறைவாகும் ..../
கோபம் வெளிப்படுத்தும் உணர்ச்சியில்
தவறுகள் சிதறி விழும் :- மனதில்
காயம் ஏற்படுத்தும் மகிழ்ச்சியில்
தவறுகள் சிரித்து எழும் :
சந்தர்ப்பங்கள் தவறுகளை
செய்ய சொல்லும் :
நிர்ப்பந்தங்கள் தவறுக்குள்
நிற்க செய்யும் :
தவறுகளில் தடுக்கி விழும் மனம்: - வாழ்வை
தடுமாற்றத்துடனே நடத்த இயலும் தினம் :
மலரை விட மென்மையானது மனம் :- அதை
மலையை போல் கடினமாக்குவது தவறின் குணம் :
நிலையில்லாதது வாழ்வு - இவ்
வுலகம் நமக்கு சொல்வது : -இதில்
நிலைப்பதற்கா தவறினை
நாம் செய்வது ?
தவறுகள் சொல்லி தரும் வகுப்பினை - கேட்டு
வாழ்வினில் வெளிப்படுத்துவோம் படிப்பினை ...
No comments:
Post a Comment