சிற்பி

சிற்பி
இவன் செதுக்குவது கல்வெட்டை அல்ல...! கல் மனதை...!

Friday, 12 November 2010

மலர் பரிசு


 


மலர் பரிசு 



கடலோரமாய் ..
கவிதையொன்றை 
எழுதி வைத்து 
சென்று விட்டேன் ../

மறு நாள் ஆகியும் 
மறையாமல் - அங்கு 
'மலரோடு நின்றது' 
மண் மேல் கவிதை ../

கவிதைக்கு அருகே மலர் :

கவிதையை கண்டும் 
காணாமல் பலர் :

காலால் மிதித்து 
நசுக்கியவர்கள் சிலர் :

வாடிய அம்மலர் 
எங்கிருந்து வந்ததோ ?

தேடி தேடி பார்த்தேன் 
மலரின் காலடி தடத்தை .../

மணல் கண்ணாடியில்- மலர்
காலடி  தடம் தெரியவில்லை /

அலையில் ஒதுங்கிய நுரை மலரோ ?- இல்லை கற் 
சிலையில் அணிந்த மாலை மலரோ ?

வந்ததன் ரகசியம் புரியாமல்- ஒரு 
கையிலெடுத்தேன் மலரை ..

மறு கையால் துடைத்தேன்
அழுது புலம்பிய மனதை ../

பரிசு பொருளாய் வந்ததென 
மனதுக்கருகே சொருகி சென்றேன் :

கவிதை போட்டியில் வெற்றி பெறா
கவிதையை மலரால் வென்றேன் :

Monday, 8 November 2010

யுக முடிவு நாளின் அடையாளங்கள்




அழிவின் அடையாளங்கள் 


எண்ணற்ற உயிரினத்தை 
தத்தெடுத்த இவ்வுலகம்.. 
என்றோ ஓர் நாள் 
உயிரற்று போய்அழியும் ../  


அழிவின் அடையாளங்களை 
அழகாய் எடுத்து கூறவே- இது  
ஆன்மிகம் கூறும் அறிவியல்   
ஏற்று கொள் அறிவே..../ 


பெற்றெடுத்து வளர்த்த மகன் - தன்னை
பேணாத அடிமை நிலை  
ஒரு தாய் அடைவாள் : 
முத்தம் ஈந்து மகிழ்ந்த மகள் - தனக்கு  
முதலாளியாய் மாறும்
நிலைகண்டு உள்ளம் உடைவாள் : 


கண்காட்சி பொருளாய் - பெண் 
காண்போரை கவரவே சிரிப்பாள்:
 உடையணிந்தும் கூட - தன்னின்  
உடழகை நிர்வாணமாய் விரிப்பாள்:


போதையூட்டும் அறிவில்
மாறி போகும் 
மனிதனின் வாழ்க்கை முறை :- அந்நிய 
 பேதை மீது பித்தம் கொண்டு 
அவர்கள் வாழ்வில் படியும் 
அழுக்கு கறை.. / 

தகுதியற்றவர் தலைமை
பொறுப்பில் அலைவர் :
தன்னலம் பேணியே 
பொதுநலம் அமைப்பர் :
 நாணயம் இல்லா 
காட்சியமைப்பு நடக்கும் -அந்நாளில் 
 நாணயத்திற்க்காகவே 
ஆட்சியமைப்பு இருக்கும் ../

கொடுக்கும் தர்மத்தை 
பொறுக்கும் நிலை அன்றிருக்காது :
செல்வங்கள் சேர்த்திருந்தும்-அவர்கள் 
செயல்களோ  வென்று இருக்காது :

ஆண்டுகள் சுருட்டப்பட்டு 
வாரங்களாக சுழற்றப்படும் :
மாதங்கள் உரிக்கப்பட்டு 
மணித்துளிகளாக விரிக்கப்படும் :
காலங்கள் கல்லறை நிமிடங்களை 
எதிர்நோக்கியே பயணிக்கும் :
கண்களின் கனவுகள் 
கண்ணீரில் மூழ்கியே மரணிக்கும் :

பூகம்பங்கள் மூன்று - இப்
பூமியை குலுக்கும் :
மேற்கு,கிழக்கு,மத்தியென-அரேபிய 
தேசத்தையே உலுக்கும் : 
உயர்ந்த கட்டிடங்கள் 
உருக்குலைந்து இடிந்து போகும் :
 உயிரினங்கள்
உயிரற்று அழிந்து போகும் :

சரித்திரம் அந்நாளில்  -தன்
நிஜத்தினை இழக்கும் :
விசித்திர விலங்கொன்று 
பேசிக்கொண்டும் இருக்கும் :

அதிசயங்கள் படைப்பினத்தை 
நிலைப்படுத்தும் -நிகழும் 
அற்புதங்கள் படைத்தவனை
நினைவுப்படுத்தும் :

எண்ணிலடங்கா குள்ளர்கள் 
கூட்டமிரண்டு  - இம் 
 மண்ணகத்தை மூடும்
படையெடுத்து நின்று ../  
நொடியில் பெருகும் 
அதன் இனப்பெருக்கத்தால் 
 மக்கள் மரண பயம் 
அடைவர்  மனநடுக்கத்தால்.../

ஆக்சிஜன் விகிதம் 
அடங்கி  போகும் அந்நேரம் ..
ஆக்டோபஸ் புகையால்
நின்று போகும் உயிர் சுவாசம் ..../ 


தன்னை இறைவன் என்பான் ..
தஜ்ஜால் என்னும் ஒருவன்../
ஒரு கண் அவனுக்கு ஊனமாகும் :-அவனால்
ஒருமுறை மரணம் கூட குணமாகும் :
 பிரமிப்புகள் அதிகம் நிகழ்த்தி
தன்னை பிரபலப்படுத்துவான் :- அவன் தன்
பேராற்றலால் இறைவனாக 
தன்னை பிரகனப்படுத்துவான் :

பூமி ஓர் நாள் 
தன் சுழற்சியை மாற்றும் :
பூகம்ப நிகழ்வினை 
தன் உடம்பினில் ஏற்றும் :
கிழக்கு சூரியனை 
மேற்கில் காட்டும் - இறை  
 மன்னிப்பென்னும் வாசல் 
அன்று தான் பூட்டும் : 

 மாபெரும் நெருப்பொன்று
திரண்டு வரும் ..
மக்களை ஓரிடத்திலே 
கொண்டு வரும் ../
ஏமன் நாட்டில் கூட்டப்படும் 
அந்த மக்கள் திரள் :- அந்நாளில்   
 ஏற்காது அவனுக்கும் 
கேட்காது மன்னிப்பின் குரல் :