சிற்பி

சிற்பி
இவன் செதுக்குவது கல்வெட்டை அல்ல...! கல் மனதை...!

Friday, 24 September 2010

கனவுகளின் சொர்க்கம் கல்லறையா ?


புது வாழ்வை தேடி 
ஒரு பயணம் ..
அவ்வாழ்வை சேரும் 
முன்னே கிட்டுமோ ?
மரணம் ../
மனித வாழ்க்கை - இங்கோ 
நரக வாழ்க்கை :
வீட்டிலே நாடோடியாய் திரிந்தவன் - இந்த 
நாட்டிலே அடிமையாய் எரிகிறான் :
நிம்மதியை தேடுகிறது அவனது இரவுகள் ...
நிம்மதியாய் உறங்குகிறது அவன் உறவுகள் :
கனவுகளின் சொர்க்கம் கல்லறையா? - இங்கே 
கடன்பட்ட அடிமைக்கு வெறும் சில்லறையா ?
அழகாய் பிறந்தவன் - இங்கு 
அழுக்காய் இருக்கிறான் :
உப்பை பிரித்தவன் - இங்கு 
குப்பை பொறுக்குகிறான் :
அடிமையாய் வாழ - தன்னை  
அடமானம் வைத்தானோ ?
அயல்நாட்டு மோகத்தில் - தனக்குள் 
அவமானம் தைத்தனோ ?
உயிர் பிழைக்க கலை செய்யும் 
நம் நாடு - இதுவோ 
உயிரோடு கொலை செய்யும் 
சுடுகாடு :
பசியென்று இருந்ததில்லை அங்கு..
பசித்திருந்தும் புசித்ததில்லை இங்கு ../'
கண்ணீரை துடைக்க 
கன்னங்களுக்கு தெரியாது -
கைகள் துடைக்கும் வரை ...
கடன்பட்ட கண்களுக்கு  
கனவுகள் நிறையாது -
கையில் காசு சேரும் வரை ../

Thursday, 23 September 2010

பனி மலை பிரதேசமா ?

பீரங்கி, துப்பாக்கிகளுக்கு
முன்னால் மன்றாடும்
கண்ணீர் துளிகள் :
தார் பூசப்பட்ட ரோடெல்லாம்
ரத்தம் போர்த்தப்பட்ட வழிகள் :
"தேவை சுதந்திரம் 
எமக்கு நிரந்திரம் " - இது
காஷ்மீரிகளின் இதய துடிப்பின் வாசகம் :
ஆக்கிரமிப்பு இந்தியாவிடம்
கேட்கிறார்கள் யாசகம் :- இது
ஒரு தலை ராகம் அல்ல ...
விடுதலை வேகம் ../
660 தீவிரவாதிகளுக்கு
6 லட்சம் சிப்பாய்கள்
காஷ்மீரின் இன்றைய நிலைமை :
இது தான் பாதுகாப்பு எனும்
பேரில் நிகழ்த்தப்படும் கொடுமை :
தீரா நாதமாய் ஒலிக்கும்
சுதந்திர வேட்கைக்கு ...
தீவிர வாத சாயம்
பூசப்படுவதென்னவோ?
விடுதலை எழுப்பும்
உணர்வுகளை நோக்கி
குண்டு மழை
வீசப்படுவதென்னவோ?
நிறைவேற்றுவோம்
ஐ .நா.வின் ஒப்பந்தத்தை ....
ஒளியேற்றுவோம் - அவர்கள்
வாழ்வின் தீப்பந்தத்தை .../
நாளையே நடக்கட்டும்
பாரப்பட்சமில்லா ஓட்டெடுப்பு :
நாமும்  சேர்ந்து நடத்துவோம்
அவர்களுக்கு வரவேற்ப்பு :
இந்தியாவின் சமாதான புறா
இப்பனி மலையில் பறக்கட்டும் ...
ரசாயனம் கலவா காற்றை
இனி பிறக்கும் குழந்தையாவது சுவாசிக்கட்டும்