நீ..
வாலிபம்
உடுத்திய
பரிமாணம் - உன்
வாழ்வோ
வற்றா
வருமானம் :
நீ..
பெருமைகள்
சுமக்கும்
புகழோவியம் - உன்
பெருமைகள்
இல்லாமல்
இயங்காது காவியம் :
கன்னி பேச்சோ
கத்தி வீசும்
ஆயுதம் - உன்னை
களவாடி சுத்தி திரியும்
இந்த காகிதம் :
வங்க கடல்
அலை போல்
உன் சிரிப்பு /
சிங்க நடை அழகோ
தனி சிறப்பு /
எதையோ தேடிடும்
உலகில் ...
எதுவும் நாடிடும் - உன்
அழகில் ../
இழப்புகளோ உன்னிடம்
இருப்பதை பெற்று செல்லும் ..
இன்பங்களோ உன்
இதயத்தை தொட்டு சொல்லும் ../
உன் உழைப்பின்
வெளிச்சம் கொண்டு
நிலாக்கள் ஒளி பெறும் ..
நீ..
உடுத்தும்
புத்தாடைக்காக - இங்கு
விழாக்கள் நடைபெறும்../
எல்லாம் இருந்தும்
எதுவும் இல்லையென - உனை
இழக்கிறாய் :
திறமை என்பது
எதுவென புரியாமல் -உன்னை
தொலைக்கிறாய்../
அறிவின் செயல் வடிவம்
திறமையாகும் ...
அறிவின் செயலே
இல்லா உருவம்
வறுமையாகும் ../
மூளை கொண்டு
சிந்திக்கும் போது
அறிவு பிறக்கும் ..
முளைக்கும் பிரச்சனையை
சந்திக்கும் போது தான்
அறிவே ஜொலிக்கும் ../
உன் வருகையை
எதிர்பார்த்து - இவ்வுலகின்
வாசல் திறக்கிறது..
உன் ஜன்னலை
எட்டிபார்த்தே - வாய்ப்புகள்
நிற்கிறது../
உன்..
உள்ளத்தில் விழுந்த அடிகள்..
உன்னை
உயரத்தில் ஏற்றும் ஏணிபடிகள்../
இன்றே முயற்சி செய் :
இவ்வுலகை ஆட்சி செய் :
முன்னேற்றமோ - உன்
வரவேற்ப்பறையில்.....
முன்னேற துடிக்கும் - நாங்களோ
உன் வகுப்பறையில்../