சிற்பி

சிற்பி
இவன் செதுக்குவது கல்வெட்டை அல்ல...! கல் மனதை...!

Monday, 25 October 2010

கைப்பேசியை கைப்பிடித்தவன் கவனிக்கவே

விஞ்ஞான அதிசயம் - உனை
விவரிக்க வேண்டியது அவசியம்.
காலங்கள் செரித்து போடப்பட்ட கடிதங்கள் - இன்று 
காலங்கள் சேமித்து மீட்டப்பட்ட நிமிடங்கள் :
விஞ்ஞானத்தின் கருவறையிலிருந்த உனக்கு 
விலாசம் தந்தவன் யாரோ ?
விபரமறியாதவர் அறியட்டும் 
மார்ட்டின் ஹூப்பர் தான் அந்த ஹீரோ "
உயிரற்ற உன்னால் உணர்வுட்டு 
உயிர்பெற்றோர் உண்டு /
கைரேகை சாலையில் 
பயணிக்கும் கைபேசி - உனை 
கைப்பிடித்தவன் 
பெறுவானோ? கைராசி ../
நீ ..
இன்ப செய்தி தருகையில் 
உள்ளமோ மகிழ்கிறது ..
இழப்பு செய்தி தருகையில் - கண்ணில் 
வெள்ளமாய் திகழ்கிறது ../
ஒலியால் உயிரை இழுக்கும் - இருவர் 
ஓசையே உறவை இணைக்கும் ../
இரு இதழ்கள் கொடுத்துகொள்ளும் இனிப்பை..
இருதயங்கள் பெறுகிறது அந்த இணைப்பை.../
தொலைவுகள் தொடும் இடமாகும் - உன்னால் 
தொல்லைகள் கூட வரமாகும் .
கண்ணீர் பேசும் வார்த்தை - உன்னால் 
கவிதை பேசும் :
முன்னாளில் கேட்போர் 
"எங்கடா போற கைவீசி ?"- அந்த 
முன்னோர் இன்றிருந்தா அவர்கள் 
கையிலும் இருக்கும் கைபேசி ../
மழலைகள் தொடுகையில்
மணம்  வீசும் - அம்
மவுனங்கள் உன்னால் 
தமிழ் பேசும் :
துயரங்கள் உண்டென்று - நீ 
தூங்குபவரை எழுப்புவதுண்டு :
வெற்றிகள் கிடைத்ததென்று - நீ 
வாழ்த்தும் பெறுவதுண்டு :
கன்னி பெண்ணின் கட்டிலிலே 
உனக்கென தனி இடமுண்டு ..
காதல் பேசும் காம பேச்சில் 
உன் கற்பும் கலைவதுண்டு ../
துள்ளி திரியும் மாணவ கூட்டம் 
நீயிருக்கும் சபை நோக்கியே ஓட்டம் :
பாடி வரும் உன்னை - சிலசமயம் 
திட்டிவிட தோன்றும் ..
தேடி வரும் உனக்காய் - மனம் 
பரிதாபமும் காட்டும் ../
உன் சிணுங்கல் கேட்டு 
அமைதியும் ஆர்ப்பரிப்பாகும் :
உடன் இருப்பவர் முகமோ 
உடனே எரிச்சலாகும் :
உன் கவர்ச்சி தன்மையால் 
காதல் கொண்டோரும் உண்டு :
கதிரியக்க தன்மையால்
காது இழந்தோரும் உண்டு :
ஆசையாய் படம் பிடித்து 
வியாபாரத்தை நிரப்புவாய் :
ஆபாசமாய் படம் எடுத்து 
விபச்சாரத்தை பரப்புவாய் :
பொருந்தா காதலையும் 
பொருத்தம் பார்த்து 
சேர்த்து வைப்பாய் :
அண்டை வீட்டு 
கணவன்,மனைவி
கள்ள காதலை 
ஏற்றி வைப்பாய் :
பாலுணர்வு தூண்டும் படங்களால் 
பாலியல் கொடுமை நடத்தி வைப்பாய் :
பாலியல் படங்களை - மாணவ 
பாடங்களாக அனுப்பி வைப்பாய் :
விரச வாசகங்கள் உன்னால் 
விடலைகளுக்கு வசியமானது - 
விச வாசகங்கள் இவர்களுக்கு 
போதிக்கப்படும் விஷயமானது :
பணம் படைத்தவன் 
மனம் கெடுக்க 
படையெடுக்கும் மிரட்டல்கள் - அக் 
கயவர் கூட்டம் கண்டறிய பயன்பட்டால் 
உனக்கோ கிடைக்கும் கைத்தட்டல்கள் :
கைப்பேசியே - உன்னை 
கைப்பிடித்தவன் கவனிக்கவே இது ..