.jpg)
ராஜ பக்சே நடத்தியது
இனவாதம் -நரேந்திர
மோடி நடத்துவது
மதவாதம் :
மதவாதம் :
இனவாதம்
கேட்டது கேள்வி - பதிலோ
கேட்டது கேள்வி - பதிலோ
இலங்கையில்
ராஜ பக்சே தோல்வி:
ராஜ பக்சே தோல்வி:
தூக்கி பிடித்ததால்
தூக்கில் ஏறியது
அவன் மானம் :
கொடுமைகள் நிறைந்தது
அவன் ஆட்சி - அக்
கொடுங்கோலன் தோல்வியே
அதற்க்கு சாட்சி :
பொது சேவையில்
பயணித்திருந்தால் கிடைத்திருக்கும்
பெரும் வெற்றி ;
பொது பல சேனாவுக்கு
பயந்திருந்ததால்
ஊரே சிரிக்குது
உன்னை பற்றி:
சமத்துவத்தை
பேண வேண்டும் நிர்வாகம் - இங்கோ
சர்வாதிகாரத்தை
தூண்டியது கருநாகம் - அதனால்
சமாதியாய் ஆனது
அந்தோ பரிதாபம்:
மக்களின் கண்ணீரை அதிகம்
செலவழிக்கும் அரசாங்கம் : அம்
மக்களாலே ஒருநாள் அசிங்கம்
பட்டு சிறை வாங்கும்: அதனாலே
அவர்கள் வடித்த கண்ணீரின்
கறை நீங்கும்: அதன் மூலம்
ஜனநாயகம் மீண்டும்
தளைத்தோங்கும்...!
.jpg)
இனவாதத்தை
கை பிடித்தவனுக்கு
சரித்திரம் கொடுத்த பாடம்:
மதவாதத்தை
கையிலெடுப்பவனுக்கு
உணர வேண்டிய நேரம்:
குறிப்பிட்ட இனத்தை மட்டும்
மகிழ்வித்தவனுக்கு
நேர்ந்த சவுக்கடி :குறித்து கொள் மோடியே - உனக்கும்
ஏற்படும் இத்தகைய நெருக்கடி;
இலங்கை உணர்ந்தது
இனவாதம் பற்றி...
இந்தியா உணருமா ?
மதவாதம் பற்றி...!